வைகாசி விசாகத்தன்று (ஜூன் 7) அம்மனுக்கும், குருவுக்கும் பூஜை செய்ய வேண்டும். அம்மனுக்கு பால் பாயாசம் படைத்து வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு செல்வம் பெருகும். குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூமாலை அணிந்து வழிபட்டால் கல்வி வளம் பெருகும். இந்நாளில் தந்தைக்கே மந்திரத்தின் பொருள் சொன்ன குருநாதன் என்று பெயர் பெற்ற முருகனும் பிறந்ததால், இந்த நாள் கல்விக்குரிய நாளாக அமைகிறது.