ராமபிரானுடைய முன்னோரான பகீரதன், தன் முன்னோர்கள் நற்கதி அடைய கடுந்தவம் செய்தான். இதன் பலனாக வைகாசி மாத வளர்பிறை திரிதியை நாளில் கங்கை பூமிக்கு வந்தாள். அந்த புனித நதியின் நீரைக் கொண்டு, தர்ப்பணம் செய்து முன்னோர் நற்கதி அடைய வழி செய்தான். வைகாசியில் வளர்பிறை திரிதியை மே ௨௮ல் வருகிறது. அந்நாளில் கங்கை நதி எல்லா புண்ணிய தீர்த்தங்களிலும் எழுந்தருளுகிறாள். அன்று முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால், அவர்கள் மகிழ்ந்து நம் குடும்பத்திற்கு செல்வ வளத்தை தருவர். குடும்ப பிரச்னைகள் தீரவும் உதவுவர்.