பதிவு செய்த நாள்
10
மே
2017
02:05
வேலூர்: வேலூர் அடுத்த திருமலைக்கோடி, நாராயணி பீடத்தின், 25 வது ஆண்டு விழாவையொட்டி, நாராயணி சுயம்பு அம்மனுக்கு, கலச நீரால் அபிஷேகம் செய்ய, கலசங்கள் அடங்கிய பல்லக்கு ஊர்வலம், ஜெய் ஸ்ரீராம் சேவா சங்கம் சார்பில், வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்து, நேற்று மாலை, 6:00 மணிக்கு புறப்பட்டது. கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இதில், வேலூர் தங்க கோவில் இயக்குனர் சுரேஷ் பாபு, நாராயணி பீடம் மேலாளர் சம்பத், திருவலம் சாந்தா சுவாமிகள் உட்பட பலர் பங்கேற்றனர். ஊர்வலம் வேலூர் பழைய பஸ் ஸ்டாண்ட், அண்ணா சாலை வழியாக, திருமலைக்கோடி நாராயணி பீடத்திற்கு சென்று, அங்கு சுயம்பு அம்மனுக்கு கலச நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.