கோயிலில் காலை நீட்டி அமரக்கூடாது என்று கூறுவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2017 02:05
கோயில்
முழுவதும் சுற்றுப் பிராகாரங்களில் எங்கே பார்த்தாலும் ஆவரண தேவதைகள்
இருக்கும். நீங்கள் ஸ்வாமி பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது கருவறை ஓர்
இடம்தான் என்று நினைக்கக்கூடாது. சன்னிதியின், கோயிலின் அந்தந்த மூலையில்
அல்லது பகுதியில் பார்த்தால் ஒரு ஸ்வாமி பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும்.
அதாவது, நம் கண்ணுக்குத் தெரிந்து, சுவாமி பிரதிஷ்டை ஆகி சன்னிதி
இருக்கும். ஆனால் நம் ஊனக் கண்ணுக்குத் தெரியாத பிரதிஷ்டைகளும் சில உண்டு.
அவை மந்திர ரூபமாக சூட்சுமமாகப் பிரதிஷ்டை ஆகியிருக்கும். ஆகையால்தான்,
கோயிலில் காலை நீட்டி அமரக் கூடாது என்கிறார்கள்.