ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்துார் கதலிநரசிங்கப்பெருமாள் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. ஜம்புலிபுத்துார் கதலிநரசிங்கப் பெருமாள் கோயில் சித்திரை திருவிழா மே 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாட்கள் நிகழ்ச்சியில் தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தது. 9ம் நாளில் சுவாமி தேரில் எழுந்தருளினார். பத்தாம் நாள் நிகழ்ச்சியில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் செய்யப்பட்டது. கதலிநரசிங்கப்பெருமாள் நேற்று ஸ்ரீதேவி, பூதேவியருடன் திருத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்தனர். மெயின்ரோடு வழியாக கோயிலை வலம் வந்த தேர் ஊர் எல்லையில் நிறுத்தப்பட்டது. இன்று மாலை மீண்டும் தேரில் வலம் வரும் சுவாமி கோயிலை சென்றடைவார்.