ஓட்டேரி : ஓட்டேரி, குயப்பேட்டையில் உள்ள ஆதிமொட்டையம்மன் கோவிலில், நேற்று இரவு தேரோட்டம் நடந்தது. ஓட்டேரி, குயப்பேட்டையில் கந்தசாமி கோவில் அருகே, ஆதிமொட்டையம்மன் கிராம தேவதை கோவில் உள்ளது. இங்கு, சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி, நேற்று இரவு தேரோட்டம் நடந்தது.தேரோட்டத்தின் போது அம்மனை வரவேற்று, தெருக்களில் உள்ள பல்வேறு வீடுகளின் வாசலில், ஆதிமொட்டையம்மன் சிலைகள் வடிவமைத்து வைக்கப்பட்டன. சித்ரா பவுர்ணமி விழாவின் இறுதி நாளான இன்று, பொங்கல் விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.