தேவதானப்பட்டி, சில்வார்பட்டி அருகே நாகம்பட்டியில் பகவதியம்மன்கோயில் சித்திரை திருவிழா நடந்தது. சிறுகுளம் கண்மாய்க்கு சென்று அம்மன் அலங்காரம் செய்து அழைத்து வரப்பட்டது. மாவிளக்கு எடுத்து பொங்கல் வைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் முளைப்பாரி எடுத்துவரப்பட்டது. இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.