இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு 100 ஆண்டுகளுக்குப் பின் சிறப்பு பிறந்த நாள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2011 11:11
சென்னை:ஒற்றை இலக்க எண்ணான "1 ராணுவ வீரர்களைப் போன்று, 11.11.11 என்ற எண்கள் அணி வகுத்திருப்பதை, இன்று காலண்டரில் பார்த்து ரசிக்க முடியும். இன்று பிறக்கும் குழந்தைகளின் பிறந்த நாள், மறக்க முடியாத நாளாக அமைந்து விடும். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் மேலும் சிறப்பாக கருதப்படும். கடந்த அக்டோபர் 31ம் தேதி, உலகின் 700வது கோடி மக்கள் தொகையை குறிப்பிடும் குழந்தை, இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம், லக்னோ அருகே உள்ள தனாவூர் கிராமத்தில் பிறந்ததாக கூறப்பட்டது. அக்குழந்தைக்கான சிறப்பு போல், இன்றைய தேதியில் பிறக்கும் குழந்தைகள் அல்லது அவர்களது உறவினர்கள், 11.11.2111 அன்று, அதாவது நூறாண்டுகளுக்குப் பின், "சிறப்பு பிறந்த நாளை கொண்டாடி நினைவு கூரலாம். அதனால் இன்று பிறக்கும் குழந்தைகளின் சிறப்பு தேதிக்காக, அவர்களுக்கு சூப்பர் குழந்தைகள் என்று செல்லப்பெயரிட்டும் அழைக்கலாம்.