பதிவு செய்த நாள்
16
மே
2017
11:05
ஊத்துக்கோட்டை : ஒதப்பை கிராமத்தில் உள்ள ராஜேஸ்வரி அம்மன் கோவிலில், 27ம் ஆண்டு, தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். பூண்டி ஒன்றியம், ஒதப்பை கிராமத்தில் உள்ள ஓம்சக்தி ராஜேஸ்வரி அம்மன், பிரத்தியங்கிராதேவி, ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், கடந்த, 10ம் தேதி, 27ம் ஆண்டு, சித்திரை பவுர்ணமி துவங்கியது. இரவு, 8:00 மணிக்கு, கிராம தேவதைக்கு பொங்கல் வைத்தல், ஊஞ்சல் சேவை, வேப்பிலை கரகம் வீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. பின், ஒவ்வொரு நாளும், பொங்கல் வைத்தல், பால்குடம் எடுத்தல், திருவிளக்கு பூஜை, அம்மனுக்கு காப்பு கட்டுதல், மாணவியரின் பரத நாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம், இரவு, 7:00 மணிக்கு, தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். இதைத் தொடர்ந்து, அம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.