பதிவு செய்த நாள்
17
மே
2017
11:05
குளித்தலை: மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, குளித்தலையில் தேரோட்ட விழா நடந்தது. குளித்தலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், பால்குட, தீர்த்தக்குட, அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடனை செலுத்தி வந்தனர். நேற்று காலை, 10:30 மணியளவில் மாரியம்மன் சுவாமி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் வைத்து, மக்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். முக்கிய வீதி வழியாக சென்ற திருத்தேர், நிலைக்கு வந்தவுடன் மாரியம்மன் கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில், பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.