பதிவு செய்த நாள்
19
மே
2017
11:05
மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மழை வேண்டி மே 22 காலை 7:00 மணிக்கு மேல் காலை 10:00 மணிக்குள் வருண ஜெபம், யாகம் நடக்கிறது. இதை முன்னிட்டு வேதமந்திர பாராயணம், வேத காயத்ரி மந்திர பாராயணம் நடக்கும். நந்தி பெருமானுக்கு நீர் தொட்டி கட்டி கழுத்து வரை நீர் நிரப்பி சிறப்பு பூஜை வழிபாடு நடக்கிறது. நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல், வீணை வாத்தியங்கள் முழங்க அமிர்தவர்ஷினி, கேதாரம், ஆனந்த பைரவி ராகங்கள் இசைத்து வழிபாடு செய்தல், உச்சிகால பூஜையில் சிவ பெருமானுக்கு ருத்ரம், சமகம், ஜெபம் செய்து அபிஷேகம் செய்விக்கப்படும். சாஸ்திரங்களில் உள்ள அனைத்து பூஜைகளும் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.