சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் விழா 11 நாட்கள் நடந்தது. தினமும் அம்மன் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சூரசம்ஹாரம், கழுகேற்ற நிகழ்ச்சியும் நடந்தது. பக்தர்கள் கயறு குத்து, அக்னி சட்டி, முளைப்பாரி, பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மே., 12 ல் தேரோட்டம் நடந்தது. தேர் நிலைக்கு வந்தபின் அன்னம் வாகனத்தில் அம்பிகை விற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்றிரவு மஞ்சள் நீராடி பத்ரகாளியம்மன் கோயிலுக்கு செல்ல கொடி இறக்கம் நடந்தது. நேற்று கோயில் வளாக தெப்பத்தில் தெப்போற்சவம் நடந்தது. அம்பிகை தெப்ப ரதத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீற்று அருள்பாலித்தார்.