கரூர் மாரியம்மன் கோயிலில் கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2017 01:05
கரூர்: கரூர் மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு கோவிலில் வைக்கப்பட்டுள்ள கம்பத்திற்கு மஞ்சள் நீர் மற்றும் பால் ஊற்றி ஏராளமான பெண்கள் வழிப்பாடு செய்தனர். கரூர் மாரியம்மன் வைகாசி திருவிழா கடந்த 14ம் தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. விழாவை கோவிலில் வைக்கப்பட்டுள்ள கம்பத்திற்கு மஞ்சள் நீர் மற்றும் பால் ஊற்றி ஏராளமான பெண்கள் வழிப்பாடு செய்தனர். வரும் ஜூன் 11ஆம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் அக்னிச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல் மற்றும் கம்பம் ஆற்றுக்கு எடுத்துச் செல்லும் நிகழ்ச்சிகள் வரும் 29, 30, 31ம் தேதிகளில் நடைபெற உள்ளது.