பதிவு செய்த நாள்
19
மே
2017
01:05
ஊத்துக்கோட்டை: கோதண்டராம சுவாமி கோவிலில், நாளை, 10 நாள் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக துவங்க உள்ளது.எல்லாபுரம் ஒன்றியம், பெருமுடிவாக்கம் கிராமத்தில் உள்ளது கோதண்டராம சுவாமி கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், வைகாசி மாதம், 10 நாள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டு, இவ்விழா, நாளை துவங்க உள்ளது. ஒவ்வொரு நாளும், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் சந்திரபிரபை, சேஷ வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.வரும், 22ம் தேதி கருடசேவையும், 26ம் தேதி திருத்தேர் பவனியும், 29ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.