மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே, மைவாடி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். மடத்துக்குளம் அருகே உள்ள, பலநுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மைவாடி மாரியம்மன் கோவிலில், மே 2ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. கடந்த 9ம் தேதி கம்பம் அமைக்கப்பட்டது. மே 16 ம்தேதி தீர்த்தமும், சக்திகும்பமும் எடுத்து வரப்பட்டன. கடந்த 17ம்தேதி திருக்கல்யாணமும், சிறப்பு பூஜையும் நடந்தன. நேற்றுமுன்தினம் மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் தொடங்கி, இரவு, 7:00 மணி வரை நடந்தது. இதில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவடைந்தது. நேற்று, மகா அபிேஷகம் நடந்தது.