பதிவு செய்த நாள்
20
மே
2017
12:05
உடுமலை: உடுமலை தாராபுரம் ரோடு, வீரசுந்தரி சமேத கருவண்ணராயர்சாமி கோவில் திருவிழாவையொட்டி, திருவீதியுலா நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோவிலில், திருவிழாவுக்கு, கடந்த, 2ம் தேதி நோன்பு சாட்டப்பட்டது. கடந்த 16ம் தேதி கோடந்துார் தீர்த்தம் எடுத்து வருதல், அலகு குத்துதல், சக்தி அழைத்தல், பொங்கல் வைத்தல் உட்பட நிகழ்ச்சிகள் நடந்தன. திருக்கல்யாணம், மாவிளக்கு, முளைப்பாரி, குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு உட்பட நிகழ்ச்சிகள், 17ம் தேதி நடந்தது. நேற்றுமுன்தினம் மகா அபிேஷகமும், மஞ்சள் நீராட்டு விழாவும், நேற்று காலை திருவீதியுலா நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.