பதிவு செய்த நாள்
20
மே
2017
12:05
அனுப்பர்பாளையம்: பொன்காளியம்மன் கோவில், தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரில் பொன்காளியம்மன், கோவில் குண்டம் மற்றும் தேர்த் திருவிழா, 3ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. கடந்த, 18ம் தேதி குண்டம் இறங்குதல் நிகழ்ழ்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், குண்டமிறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்பின், நேற்று முன்தினமும், நேற்றும் தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேர் வடம் பிடித்து, நிலை சேர்த்தனர். தேர்த்திருவிழாவில், இன்று இரவு 9:00 மணிக்கு அலங்கார முத்துப்பல்லக்கில் பொன்காளியம்மன் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. நாளை, இரவு 9:00 மணிக்கு மண்டப கட்டளை, பரிவேட்டை, உள்ளிட்ட நிகழ்ச்சி நடக்கிறது. 22ம்தேதி காலை மஞ்சள் நீர் உற்சவத்துடன், குண்டம் தேர்த்திருவிழா நிறைவடைகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெயமணி, செயல் அலுவலர் சீனிவாசன் மற்றும் ஊர் பொது மக்கள் செய்துள்ளனர்.