ஊத்துக்கோட்டை: சாய்பாபா கோவிலில், மூலவருக்கு நடந்த பாலாபிஷேக நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ளது, சாய்பாபா கோவில். இக்கோவிலில், மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பால் எடுத்து வந்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. சாய்பாபா சன்னதியில் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். பஜனை நிகழ்ச்சி முடிந்தவுடன், சாய்பாபாவிற்கு தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.