ஊத்துக்கோட்டை: கத்திரி வெயிலில் நடந்த குலதெய்வ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு படையல் இட்டு வழிபட்டனர். ஊத்துக்கோட்டை, பூந்தோப்பு பகுதியில் உள்ளது. சப்த கன்னியர் கோவில், பகுதிவாசிகள் பங்களிப்புடன் கட்டப்பட்ட இக்கோவிலில் செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவர். தற்போது, கோடை காலம் துவங்கி கத்தரி வெயிலில் காய்ந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நேரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். நேற்று வெள்ளிக்கிழமை மதியம், 12.00 மணிக்கு சப்த கன்னியர்களுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திராளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.