முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2017 02:05
புதுச்சேரி: முதலியார்பேட்டையை அடுத்த முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது.
முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 1ம் தேதி துவங்கியது. தொடர்ந்து நடந்து வரும் விழாவில் 16ம் தேதி பகாசூரன் வதம், 17ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. முக்கிய விழாவாக நேற்று பகல் 12:00 மணியளவில் படுகள நிகழ்ச்சியும், மாலை 6:00 மணியளவில் தீமிதி திருவிழாவும் நடந்தது. விழவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர். இன்று இரவு தெப்பல் திருவிழாவும், வரும் 26ம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது.