பெருமாள் கோவில் குளத்தை துார்வாரிய கிளியனுார் கிராம பொதுமக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2017 12:05
வானுார்: கிளியனுார் பெருமாள் கோவில் அக்னி தீர்த்த குளத்தை பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சேர்ந்து தங்களது சொந்த செலவில் துார்வாரும் பணியை மேற்கொண்டனர். வானுார் பகுதியில் ஏரி, குளம், கிணறு, ஆழ்துளை கிணறுகள் கடும் வறட்சி காரணமாக தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன. நீர்நிலைகளை துார்வார அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கிளியனுார் கிராம மக்களை தங்களது சொந்த செலவில் துார்வாருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன் .தொடர்ச்சியாக கிளியனுார் பெருமாள் கோவில் அருகில் துார்ந்துபோய் வறண்டு கிடந்த அக்னி தீர்த்த குளத்தை துார்வாருவதென அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் முடிவு செய்தனர். இதை தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து ரூபாய் ஒரு லட்சத்தி 50 ஆயிரம் பணம் திரட்டி, கடந்த ஒரு வாரமாக இரண்டு பெக்லைன் இயந்திரம், மூன்று டிராக்டர் கொண்டு குளத்தை துார்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. துார்வாரிய மண்ணை கரைமீது கொட்டி கரையை பலப்படுத்தியுள்ளனர். அரசை எதிர்பார்த்து நீண்ட நாட்கள் காத்திராமல், கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் முன் வந்து, குளத்தை துார்வாரிய சம்பவம், அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.