புதுச்சேரி: இடையன்சாவடி வர்ணமுத்து மாரியம்மன் கோவிலில், செடல் உற்சவத்தையொட்டி மிளகாய் சாந்து அபிஷேகம் நேற்று நடந்தது. கோவில் செடல் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மிளகாய் அபிஷேகம் நேற்று நடந்தது. காலையில் விநாயகர், அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:00 மணியளவில், மூன்று பக்தர்களை வர்ணமுத்து மாரியம்மன், அங்காளம்மன், காளியம்மனாக பாவித்து சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின், மிளகாய் சாந்து அபிஷேகம் செய்யப்பட்டது. மிளகாய் சாந்து பருகவும் அளிக்கப்பட்டது. பக்தர் கள் செடல் போட்டும், அலகு குத்தியும் வாகனங்களை இழுத்தும் நேர்த்திக் கடனை செலுத்தினர்.