செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் திருத்தேர் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேர் வடம் பிடித்தனர். செஞ்சியை அடுத்துள்ள சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் 10 நாள் பிரம்மோற்சவ விழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய விழாவான பெரிய திருவடி எனும் கருட சேவை 26ம் தேதி இரவு நடந்தது. 27 ம்தேதி யானை வாகனத்தில் சாமி ஊர்வலம் நடந்தது. நேற்று காலை 7.30 மணிக்கு பூதேவி, ஸ்ரீதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு அலங்காரமும் விஷேச பூஜையும் நடந்தது. 9.20 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி துவங்கியது. இதில் செஞ்சி எம்.எல்.ஏ., மஸ்தான்,இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், கமலக்கன்னியம்மன் கோவில் அறங்காவலர் அரங்கஏழுமலை, முன்னாள் கவுன்சிலர் விஜயகுமார், முன்னாள் ஊராட்சிதலைவர் ரங்கநாதன், தேர்திருப்பணிக்குழுவினர் குணசேகர், ஏழுமலை, இளங்கீர்த்தி, ஸ்ரீராம் ரங்கராஜ் மற்றும் ஏராளமானவர்கள் கலத்து கொண்டனர். இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். பூஜைகளை நாராயணன் பட்டாச்சாரியார் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.