பதிவு செய்த நாள்
29
மே
2017
12:05
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கூசுமலை முனீஸ்வரன் கோவில், எட்டாம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிபட்டனர். கிருஷ்ணகிரி - பெங்களூரு சாலையில், கலெக்டர் அலுவலகம் அடுத்து உள்ள கூசுமலையில் முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலின், எட்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, நேற்று காலை, 5:00 மணிக்கு, முனீஸ்வரன் மற்றும் பச்சையம்மனுக்கு சிறப்பு அபி?ஷகமும், அலங்காரமும் நடந்தது. விழாவையொட்டி, பையனப்பள்ளி, சிப்பாயூர் கிராமத்தைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட பெண்கள், பகல், 12:00 மணிக்கு, தாரை, தப்பட்டைகள் முழங்க, கோவிலுக்கு மாவிளக்கை ஊர்வலமாக எடுத்து சென்று வழிபட்டனர். பின் கோவில் முன், 100க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவையொட்டி, கோவில் வளாகத்தில் நேற்று துவங்கி, வரும், எட்டு நாட்களுக்கு, பக்தி நாடகங்களை நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.