பதிவு செய்த நாள்
31
மே
2017
12:05
வேடசந்துார்: வேடசந்துார் மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கும் நிகழ்சி சிறப்பாக நடந்தது. வேடசந்துார் கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோயில் வருடாந்திர திருவிழா தற்போது நடந்து வருகிறது. வேடசந்துார், நாகம்பட்டி, கருக்காம்பட்டி, அடைக்கனுார் உள்ளிட்ட 18 குக்கிராம மக்கள் பங்கேற்று கொண்டாடும் இவ்விழாவில், கரகம் பாலித்தல், மாவிளக்கு மற்றும் அக்கினிச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்சிகள் நடந்தன. நேற்று மாலை 5:30 மணியளவில் குழந்தைகள் உட்பட திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கினர். பரமசிவம் எம்.எல்.ஏ., மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, செயல் அலுவலர் மகேந்திரபூபதி, தலைவர் கணேசன், செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் பார்த்தசாரதி, நிர்வாகிகள் சந்திரசேகர், முத்தையா உட்பட பலர் பங்கேற்றனர்.