பதிவு செய்த நாள்
01
ஜூன்
2017
01:06
ஹலசூரு: ஹலசூரு ஆஞ்சநேய சுவாமி கோவில், ராஜகோபுரம் கும்பாபிஷேக பூஜைகள், நாளை துவங்குகின்றன. ஹலசூரு பஜார் தெருவிலுள்ள ஆஞ்சநேய சுவாமி கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் விக்ரஹம், 1576ல், மகா வேதாந்த பண்டித் ஸ்ரீவியாசராஜா நிறுவியது.
இக்கோவிலுக்கு புதிதாக கட்டப்பட்ட, ஐந்து அடுக்கு ராஜகோபுர கும்பாபிஷேக பூஜைகள், நாளை துவங்குகின்றன. நாளை மாலை, 4:30 மணிக்கு கணபதி பாடல், புண்யாஹா, வாஸ்து பூஜை, அங்குரார்ப்பணம் பூஜை, நவக்கிரஹம், வாஸ்து ஹோமம், திக்பாலரக, பிரகாரசுத்தி, கேயபரிகாரா, மங்களாரத்தி, பிரசாதம் வினியோகம். வரும், 3ம் தேதி, காலையில், 108 கலச பூஜை, கலாதிவாச ஹோமம், மூலஸ்தான சன்னதிக்கு, 25 கலச அபிஷேகம், மாலை, 5:00 மணிக்கு, 108 கலச பிரதிஸ்தாபனம், கலச பூஜை, கலச ஊர்வலம், மகாமங்களாரத்தி, பிரசாதம் வினியோகம். ஜூன், 4ம் தேதி காலை, 10:15 மணி முதல், 11:15 மணிக்குள் ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. அன்று காலையில் ஆஞ்சநேய சுவாமிக்கு மகாமூல மந்திர ஹோமம், பூர்ணாஹூதி, பிரதான கலச கோபுர மகா கும்பாபிஷேகம், மகா மங்களாரத்தி, பிரசாதம், அன்னதானம் வினியோகிக்கப்படுகிறது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளுமாறு, பக்தர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.