பதிவு செய்த நாள்
01
ஜூன்
2017
01:06
அயோத்தி: உ.பி., மாநிலம் அயோத்தியில், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ராமர் கோவிலில், அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று, வழிபாடு நடத்தினார். உ.பி.,யில், பா.ஜ.,வை சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். மாநில முதல்வராக பதவியேற்ற பின், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஆதித்யநாத், முதல் முறையாக நேற்று, அயோத்தியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு சென்று வணங்கினார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில், அத்வானி உள்ளிட்ட, பா.ஜ., மூத்த தலைவர்களுக்கு எதிராக, கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ள நிலையில், ராமர் கோவிலுக்கு முதல்வர் ஆதித்யநாத் சென்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக, அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது. ராமர் கோவிலில், 30 நிமிடம் பிரார்த்தனை செய்த முதல்வர் ஆதித்யநாத், பின், சரயு நதிக்கரைக்கு சென்று புனித சடங்குகளில் ஈடுபட்டார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதியப்பட்டவர்களில் ஒருவரான, தரம் தாஸ், முதல்வர் ஆதித்யநாத்துடன் நேற்று ராமர் கோவிலுக்கும், சரயு நதிக்கும் வந்திருந்தார்.