பதிவு செய்த நாள்
02
ஜூன்
2017
02:06
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம், டவுன் பஞ்சாயத்து காவிரி படுகை பகுதியில், விநாயகர் கோவில் அருகில் அதிசயமாக அரசமரம், வேப்பமரம் மற்றும் இச்சி மரம் ஆகியவை ஒன்றிணைந்து கற்பக விருட்சகமாக வளர்ந்து வருவதால், பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து பகுதியில், காவிரி படுகை செல்லும் வழியில், கட்டளை வாய்க்கால் அருகில் விநாயகர் கோவில் உள்ளது. இதன் முன்புறம், அரச மரம், வேப்பமரம் மற்றும் இச்சி மரம் ஆகிய மூன்று மரங்கள் ஒன்றிணைந்து வளர்ந்து வருகிறது. இதுபோன்று தமிழகத்தில், பத்து இடங்களில் உள்ளது. இந்த பகுதி பெண்கள், இளைஞர்கள் தங்கள் திருமண தடை நீங்க, மரத்தில் மஞ்சள் கயிறு கட்டிவிட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும், இந்த மரம் கற்பக விருட்சகமாக இருப்பதால், காவிரியில் நீராடி விட்டு பக்தர்கள் தினமும் வழிபாடு செய்து வருகின்றனர்.