ராமேஸ்வரம், ராமேஸ்வரம் பழைய போலீஸ் லைன் தெரு மகா மாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகத்திற்காக முதல்கால யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி, மகா தீபாராதனை நடந்தது. 3ம் நாளான்று 4ம் கால யாக சாலை பூஜை முடிந்ததும், 108 கலசத்தில் திரவியஹூதி, மகா தீபாராதனை நடந்தது. பின் மாரியம்மன் கோயில் கோபுர கலசத்தில் குருக்கள் சிவராசன் புனித நீரை ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தினார். கூடியிருந்த பக்தருக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இதன் பின் நடந்த மகா தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முத்துமாரி, எம்.முருகன், பஞ்சவர்ணம், பழனிச்சாமி, விழா குழுவினர் செய்திருந்தனர்.