அலீமக்துாம் மஹாயிமீ என்ற மகான் சிறுவராக இருந்த காலத்தில், ஒரு இரவில் அவருடைய தாயார், “மகனே! எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா,” என்றார். வீட்டில் தண்ணீர் இல்லை. எனவே கிணற்றுக்குப் போய் தண்ணீர் கொண்டு வந்தார். அவர் வருவதற்குள், தாயார் துாங்கிவிட்டார். மஹாயிமீ விடிய விடிய அம்மாவின் அருகில் கோப்பையுடன் நின்றார். மறுநாள் காலை தாயார் கண் விழித்தார்.வியப்பு மேலிட, “மகனே! எவ்வளவு நேரம் இப்படி நிற்கிறாய்?” என்று கேட்டார்.“அம்மா! நேற்றிரவு தாங்கள் தண்ணீர் கேட்டீர்கள். நான் கொண்டு வருவதற்குள் உறங்கி விட்டீர்கள். விழித்தவுடன் கேட்டால் கொடுக்கலாம் என தங்கள் அருகிலேயே, உறங்காமல் காத்து நிற்கிறேன்,” என்றார் மஹாயிமீ.அந்த தாய் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்.தாயின் காலடியிலேயே சொர்க்கம் இருக்கிறது என்ற நாயகத்தின் பொன்மொழி நம் அனைவருக்கும் பொருந்தும்.
இன்று நோன்பு திறக்கும் நேரம் : மாலை 6:42 மணி நாளை நோன்பு வைக்கும் நேரம் : அதிகாலை 4:15 மணி.