மதுரை திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் மாங்கொட்டை திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2017 11:06
மேலுார்: மதுரை திருவாதவூர் திருமறைநாதர், வேத நாயகி அம்பாள் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் நடக்கும் மாங்கொட்டை திருவிழா மே 29 கொடியேற்றுத்துடன் துவங்கியது. நேற்று சுவாமி பஞ்ச மூர்த்திகளுடன் 8 கி.மீ., தொலைவில் உள்ள மேலுாருக்கு வந்தார். வழி நெடுகிலும் பக்தர்கள் மண்டகப்படி அமைத்து வரவேற்றனர். மேலுாரின் நுழைவுவாயிலான சாலக்கரையான்ஊரணி அருகில்உள்ள மண்டகப் படியில் தாசில்தார் தமிழ்ச்செல்விசுவாமியை வரவேற்றார். அதன் பிறகு தாசில் தாருக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து ஹிண்டு வர்த்தக சங்கத்தினர் மற்றும் நாவினிபட்டியை சேர்ந்தவர்கள் வரவேற்றனர். பிறகு அங்கிருந்து கிளம்பிய சுவாமி, மேலுார் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தார். சுவாமிக்கு அபிேஷகம் செய்யப்பட்டது. இவ்விழாவில் ஆர்.டி.ஓ., பெனடிக்ட் தர்மாராய் கலந்து கொண்டார்.