திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம் நடந்தது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு அன்று பக்தர்கள் அதிகளவில் வருவர். கும்பாபிஷேக திருப்பணிகள் கடந்த ஆண்டு தொடங்கின. மே 29ல் கணபதி யாகத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு ஆறம் கால யாக பூஜைகள் துவங்கின. காலை 8:00 மணிக்கு புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சார்யார்கள் கொண்டு வந்தனர்.கலசங்கள் மீது புனித நீரை ஊற்றி, பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார். அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.