மானாமதுரை: மானாமதுரை அருகே நவத்தாவு கிராமத்தில் அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு திருவிழா 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வைகாசியில் நடைபெறும்.இந்த வருடம் திருவிழாவிற்காக கோவிலில் காப்பு கட்டப்பட்டு கிராமத்தினர் கடந்த சில நாட்களாக விரதம் இருந்து வந்தனர். மானாமதுரை குலாலர் தெருவில் மண்ணால் ஆன குதிரைகள், சுவாமி உருவங்கள் செய்ய ஆர்டர் கொடுத்திருந்தனர்.வர்ணம் தீட்டப்பட்ட இந்த உருவங்களை முருகன் கோவிலில் பூஜைகள் செய்து நவத்தாவு கிராமத்தினர் எடுத்துச் சென்று அய்யனார் கோவில் முன்பு சிறப்பு பூஜை செய்தனர்.விழாவில்கிராமத்தினரின் உறவினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அன்னதானம் நடைபெற்றது.