பதிவு செய்த நாள்
09
ஜூன்
2017
01:06
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த மகா சுவாமிகள், 124வது ஜெயந்தி விழாவில், சந்திரசேகரேந்திரசரஸ்வதி சுவாமிகள் உருவபடம், அலங்கரிக்கப்பட்டதேரில் ஊர்வலம் வந்தது. காஞ்சிபுரம் சங்கரமடத்தின், 68வது பீடாதிபதியாக இருந்தவர், சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். அவரது, 124வது ஜெயந்தி விழா, நேற்று, சங்கர மடத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதை முன்னிட்டு நேற்று காலை , 7:00 ம ணிக்கு, ருத்ரபாராயணம், பூஜை, ஹோமம் முதலியவை நடைபெற்றன. மதியம், 12:30 மணிக்கு, அதிஷ்டானத்தில் மஹா அபிஷேகம் நடந்தது. மாலை , 6:00க்கு சுவா மிகள் உருவபடம், அலங்கரிக்கப்பட்ட தேரில், வலம் வந்தது. மடத்தில் பாராயணம், இன்னிசை கச்சேரிகள் நடந்தன.