பதிவு செய்த நாள்
09
ஜூன்
2017
12:06
ஊத்துக்கோட்டை: கங்கையம்மன் கோவில், தீமிதி திருவிழாவில், திரளான பக்தர்கள் காப்பு கட் டி தீமிதித்தனர். எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம் ஊராட்சி,அமனம்பாக்கம் கிராமம், தெலுங்கு காலனியில் உள்ளது கங்கையம்மன் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், வைகாசி மாதம் , தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.கடந்த, 30ம் தேதி, 18ம் ஆண்டு, தீமிதி திருவிழா காப்பு கட்டி துவங்கியது. ஒவ்வொரு நாளும், கரகம் அலங்கரிக்கப்பட்டு வீதிஉலா வந்தது. நேற்று முன்தினம் மாலை, 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள், ‘கோவிந்தா, கோவிந்தா ’என, கோஷமிட்டனர். தொடர்ந்து, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.