பதிவு செய்த நாள்
09
ஜூன்
2017
02:06
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வட்ட பாறையின் மேல் அமைந்துள்ள காளியம்மனுக்கு, கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. கோவில் நகரமான திருக்கழுக்குன்றத்தில், பழமையான வட்டபாறையின் மேல், காளியம்மன் கோவில் உள்ளது. சிதிலமடைந்த இந்த கோவிலை சீரமைக்க, ருத்ராங்கோவில் கிராமத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, 60 லட்சம் ரூபாய் மதிப்பில்,காளியம்மன் சன்னதி விமானம், சக்தி விநாயகர், நவகிரக மூர்த்திகள், ஆஞ்சநேயர், திரவுபதியம்மன் கோவிலில், சிற்ப கலையோடு திருப்பணி மேற்கொள்ளப்பட்டு, முடிந்தது.
இதையடுத்து, நேற்று காலை, 8:00 மணிக்கு, யாகசாலை பூஜை முடிக்கப்பட்டு, கலசங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அனைத்து சன்னதிகளிலும் மஹா அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது. இதில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். அதற்கு முன்னதாக, 6ம் தேதி, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை , நான்காம்கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. காளியம்மன் கோவிலில், விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.