பதிவு செய்த நாள்
09
ஜூன்
2017
03:06
திருப்பூர் : திருப்பூர் தென்னம்பாளையத்தில், ஸ்ரீ விநாயக பெருமான், ஸ்ரீ முருக பெருமான், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ வீரமாத்தியம்மன், ஸ்ரீ தன்னாசியப்பன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மகா கும்பாபிஷேக விழா, கடந்த, 5ல் துவங்கியது. அன்றிரவு கிராம சாந்தி நடந்தது. கடந்த, 6ல், கணபதி வழிபாடு, மகா கணபதி ஹோமம், தனபூஜை, முளைப்பாலிகை எடுத்து வருதல்; கடந்த, 7ல், விமான கலசம் வைத்தல், மூன்றாம் கால பூஜை, உபசாரம் திருமுறை விண்ணப்பம் சாற்றுதல் நடந்தது. நேற்று, யாகசாலையில் இருந்து திருவருட்தியை, மூலத்திருமேனியில் ஏற்றுதல்; அதை தொடர்ந்து, கோபுர விமானத்துக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மகா அபிஷேகம், தசசரிசனம், கோபூஜை நடைபெற்றது. தொடர்ந்து, அன்னதானம் நடந்தது. நேற்று மாலை, அம்மன் திருவீதி உலா நடந்தது. சுற்றுவட்டார மக்கள், சாமி தரிசனம் செய்தனர். இன்று முதல், மண்டல பூஜை துவங்குகிறது.