மதுரை: மதுரை மேலமாசி வீதி இம்மையில் நன்மை தருவார் கோயிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை விழா நாளை (ஜூன் 10) நடக்கிறது. இதை முன்னிட்டு ஞானசம்பந்தர் திருவுருவ சிலைக்கு அபிஷேக, ஆராதனை, பாராயணம் காலை 8:00 மணிக்கு நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு தேவார பதிகங்களின் இசை பாராயணம், ஞானசம்பந்தர் உற்சவ திருமேனி திருவீதி புறப்பாடு அர்ச்சகர் தர்மராஜசிவம் தலைமையில் நடக்கிறது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஞானசம்பந்தர் வேட போட்டி நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு கோயிலுக்கு வந்து பெயர்களை பதிவு செய்யலாம். விபரங்களுக்கு இசையாசிரியர் சுரேஷ்சிவனை 94439 30540 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.