பதிவு செய்த நாள்
09
ஜூன்
2017
03:06
அனுப்பர்பாளையம் : திருப்பூரை அடுத்த நெருப்பெரிச்சல் மொம்மநாயக்கன்பாளையத்தில், செல்வ விநாயகர், பழனி ஆண்டவர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, கோவை சரவணம்பட்டி ஆதீனம் குமரகுரு அடிகளார், திருப்பேரூர் ஆதீனம் இளையபட்டம் மருதாசல அடிகளார், பேரூர் சென்னியப்பனார், விஜயமங்கலம் அப்பர் அடிப்பொடி சொக்கலிங்கனார் ஆகியோர் முன்னிலையில், நேற்று காலை, 8:30 மணிக்கு மேல், 9:30 மணிக்குள், கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, பகத்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பெருந்திருமஞ்சனம், பதின்மங்கலகாட்சி, உலக நலன் விண்ணப்பம், பேரொளி வழிபாடு, திருறை விண்ணப்பம் உள்ளிட்டவை நடந்தது.