விருதுநகர்: விருதுநகர் பராசக்தி வெயிலுகந்தம்மன் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். இக்கோயில் விழா கடந்த 30 ல் துவங்கி 10 நாட்களாக நடந்து வந்தது. தினமும் அம்மன் பல்வேறு மண்டபகப்படிகளில் எழுந்தருளி வாகனங்களில் விதி உலா வந்து அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் கடந்த 6 ம் தேதி நடந்தது. மறுநாள் அம்மனுக்கு பக்தர்கள் கயிறு குத்து, அக்னி சட்டி, கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல் என நேர்த்திக் கடன் செலுத்தினர். இதை தொடர்ந்து நேற்று மாலை கும்ப பூஜை, யாக பூஜை நடக்க, அதன்பின் வெயிலுகந்தம்மன், மாரியம்மன் தேருக்குள் எழுந்தருள தேரோட்டம் நடந்தது. அம்பாள் எழுந்தருளிய தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.