புதுச்சேரி: வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவில் 31வது ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த மே மாதம் 31ம் தேதி துவங்கியது. தினமும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. ஒன்பதாம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. ஆயிரகணக்கான பக்தர் கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். இரவு 7.30 மணிக்கு துவஜா அவரோகணம், சாற்றுமுறை நடந்தது. பத்தாம் நாளான இன்று 10.30 மணிக்கு 108 கலச திருமஞ்சனம் நடக்கிறது. ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி ராஜசேகரன், தனி அதிகாரி மணவாளன் ஆகி யோர் செய்திருந்தனர்.
கைகொடுத்த தீயணைப்பு: வீரர்கள் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டத்தையொட்டி தீயணைப்பு வாகனமும், வீரர்களும் பாதுகாப்பிற்காக பின் தொடர்ந்தனர். தியாகராஜர் வீதியில் வந்தபோது தேர் பள்ளத்தில் சிக்கியது. அப்போது துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் கட்டைகளை அடுக்கி மேலும் பள்ளத்தில் சிக்காமல் தடுத்தனர். இதனால் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.