காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வசந்த உற்சவத்தில், தங்க பல்லக்கில் எழுந்தருளி ராஜவீதிகளில் சுற்றி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வசந்த உற்சவம் கடந்த வியாழக்கிழமை துவங்கியது. தினமும் இரவு,7:30 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு வேதபாராயணம் நடந்தது. நேற்று மூன்றாம் நாள் இரவு, 8:00 மணிக்கு தங்கப்பல்லக்கில் காமாட்சி அம்மன் எழுந்தருளினார். சன்னதி தெரு வழியாக நான்கு ராஜவீதிகளில் வலம் வந்து, மீண்டும் இரவு, 10:00 மணிக்கு கோவிலை சென்றடைந்தார். விழாவிற்கான ஏற்பாட்டை, கோவில் ஸ்ரீகாரியம்சல்லா விஸ்வநாத சாஸ்திரி,கோவில் நிர்வாக அலுலர் நாராயணன்ஆகியோர் செய்திருந்தனர்.