பதிவு செய்த நாள்
13
ஜூன்
2017
12:06
மீஞ்சூர்: மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்வசத்தின் தேர் திருவிழாவில், பக்தர்கள் தேரின் வடம்பிடித்து இழுத்து நெஞ்சுருகவணங்கி சென்றனர். வடகாஞ்சி எனப்படும், மீஞ்சூர், பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில்,6ம் தேதி, கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. கருடசேவை, பெருமாள் திருக்கல்யாணம் உள்ளிட்ட உற்சவங்கள் தொடர்ந்து நடைபெற்றன. நேற்று, தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்டதேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்வச பெருமாள் வீற்றிருந்தார். வாண வேடிக்கைகள், மேள தாளங்களுடன், காலை , 7:00 மணிக்கு நிலையில் இருந்து புறப்பட்ட தேர், மாடவீதிகள் வழியாக உலா வந்தது. தேர்த்திருவிழாவில், மீஞ்சூர், பொன்னேரி, நந்தியம்பாககள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று, தேரின் வடம்பிடித்து இழுத்து பெருமாளை வழிபட்டனர். மீஞ்சூர் காவல்துறை, பொன்னேரி தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். தேரின் வடம்பிடித்து இழுப்பவர்களுக்கு பக்தர்கள் மோர், குளிர்பானங்கள், அன்னதானங்களை வழங்கினர். பகல், 12:00 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது.