திருக்கோஷ்டியூர் அஷ்டாங்க விமானம் தங்கத் திருப்பணி மும்முரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூன் 2017 12:06
திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோவில் மூலவர் அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத் தகடு வேயும் திருப்பணி நடைபெற்று வருகிறது.
திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோவில் 108 வைணவத் தலங்களுள் முக்கியமானது. இங்கு சயனக்கோலத்திலுள்ள மூலவரின் அஷ்டாங்க விமானம் மிகவும் சிறப்புப் பெற்றது. இவ்விமானம் 96 வகையான வைணவ விமானங்களில் முதன்மையானது. திருமாலின் 108 திருப்பதிகளில் இது போன்ற அஷ்டாங்க விமானம்ஓரு சில கோவில்களில் மட்டும் அமைந்துள்ளது.தமிழகத்தில் உத்திரகோசமங்கை, கூடழலகர் கோவில், திருக்கோஷ்டியூர் ஆகிய மூன்று கோவில்களில் மட்டும் இவ்வகை விமானங்கள் உள்ளன. ‘ஓம் நமோ நாராயணாய’ எனும் மூன்று சொற்களை உணர்த்தும்விதமாக இக்கோவிலின் அஷ்டாங்க விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது.விமானத்தின் கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர்(பூலோக பெருமாள்), முதல் தளத்தில் ஆதிசேஷன் மீது சயனகோலத்தில் சவுமியநாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்), இரண்டாவது அடுக்கில் நின்றகோலத்தில்உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்),மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில்பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்) என சுவாமி நான்கு நிலைகளில் அருளுகிறார்.90 அடி உயரம் வரை கல்திருப்பணியாலும்,சுதை வேலைப்பாடுகளுடன் சேர்த்து 136 அடி உயரம் வரை இந்த விமானம் உள்ளது.
இச்சிறப்பு மிக்க விமானத்திற்கு சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானம், ஸ்ரீசவுமிய நாராயண எம்பெருமானார் சாரிடபிள் டிரஸ்ட்,கிராமத்தினர் மற்றும் உபயதாரர்கள் தங்கத் தகடு வேய முடிவெடுத்தனர். அதன்படிகடந்த 2007ல் விமானத் திருப்பணிக்கு பாலாலயம் நடைபெற்று அஷ்டாங்க விமானத்திற்கு தங்கத்தகடு வேயும் திருப்பணித் துவங்கியது. முதற் கட்டமாக சுதை வேலைப்பாடுகளில் தாமிரத்தகடு பொருத்தும் பணி நடைபெற்றது. பின்னர்தாமிர பிம்பங்கள் செய்யும் பணி நிறைவடைந்தது.
பத்து ஆண்டுகளாகநடந்தஇத்திருப்பணி தற்போதுமும்முரமாக நடைபெறத் துவங்கியுள்ளது. அண்மையில் தாமிர வேலைப்பாடுகளில் தங்கத்தகடு பதிக்கும்மதிப்பீடு நடந்தது. சுமார் 5 லேயர் தங்கத் தகடுப்பதிக்க 80 கிலோ தங்கம் மதிப்பிடப்பட்டுள்ளது.தற்போது உபயதாரர்களால் வழங்கப்பட்டுள்ள தங்கத்தை தங்கத்தாளாக்கும் பணியில் 10 பேர்கொண்ட குழுவினர் ஈடுப்பட்டுள்ளனர்.ஸ்ரீராமானுஜர் திருக்கோட்டியூர் நம்பிகளிடம் திருமந்திர உபதேசம் பெற்று உலகத்தினருக்கு உபதேசித்தது இந்த விமானத்திலிருந்து தான். அவரது 1000 ஆவது அவதாரப் பெருவிழா நிறைவடைவதற்குள் திருப்பணி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.