Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குளத்தூர் மகாமாரியம்மன் கோவில் ... திருப்பரங்குன்றம் கோயிலில் உற்சவர்களுக்கு கும்பாபிஷேகம் திருப்பரங்குன்றம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சையில் 24 பெருமாள்கள் கருட சேவை கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2017
01:06

தஞ்சாவூர்: தஞ்சையில் 24 பெருமாள்கள் கருட சேவை நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Default Image
Next News

இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சை அரண்மனை தேவஸ்தானம், தஞ்சை ராமனுஜ தர்சன சபா ஆகியவை இணைந்து 24 கருட சேவை விழாவை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்றன. இந்தாண்டு 83வது ஆண்டு கருடசேவை நேற்று நடந்தது. இதில், 24 பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவில்களில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு 8 மணிக்கு கொடிமரத்து மூலை வந்தன. அங்கிருந்து ஹம்ச வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் முதலிலும், பின்னர் நீலமேகர், மணிக்குன்னர், நரசிம்மர், கல்யாண வெங்கடேசர், வேளூர் வரதராஜர், படித்துறை வெங்கடேசர், தெற்கு வீதி கலியுக வெங்கடேசர், கோவிந்தராஜர், ஜனார்த்தனர், கொண்டிராஜ பாளையம் யோக நரசிம்மர், கோதண்டராமர், கீழவீதி வரதராஜர், மேலவாசல் ரெங்கநாதர், மேலவீதி விஜயராமர், நவநீத கிருஷ்ணன், பள்ளியக்ரஹாரம் கோதண்டராமர், சுங்கரன்திடல் லெட்சுமி நாராயணர், மாகர் நோம்புச் சாவடி வெங்கடேசப் பெருமாள், நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட 24 பெருமாள்கள் வரிசையாக கருட வாகனத்தில் நான்கு முக்கிய வீதிகளிலும் வீதியுலாவாக பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்புரிந்து மீண்டும் கொடிமரத்து மூலையை வந்தடைந்தது. கருடசேவையின் போது ஆண்கள்,பெண்கள் கோலாட்டம் ஆடியும், மங்களாசாசனம் படியும் வழிப்பட்டனர்.

இதில், நான்கு வீதிகளிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. இன்று(16ம்தேதி) நவநீத கிருஷ்ணன் சேவை விழா அல்லது வெண்ணெய்த்தாழி மகோற்சவ விழா நடக்கிறது. காலை 6 மணிக்கு 15 பெருமாள்களும் நவநீத சேவைக்காக புறப்பட்டு காலை 8 மணிக்கு கொடிமரத்து மூலைக்கு, அங்கிருந்து கீழராஜவீதி, வடக்குராஜ வீதி வழியாக மீண்டும் கொடிமரத்து மூலையை அடைந்து அவரவர் கோவில்களுக்கு சென்றவடைவர். நிறைவு நாளான 17ம் தேதி விடையாற்றி திருவிழா நடக்கிறது. பெருமாள் நகர்வலத்தின்போது பரிகாரமாக நீராட்டு விழா முதலிய சிறப்பு வழிபாடுகள் வெண்ணாற்றங்கரை விண்ணகரங்களில் மேற்கொள்ளப்படுகிறது. காலை 10 மணிக்கு மேலசிங்கர் கோவிலில் தொடங்கும் திருமஞ்சனம், தளிகை, அலங்காரம், தீபாரதனை மதியம் 12 மணி வரை நடக்கிறது. இத்துடன் பன்னிரு கருடசேவை பெருவிழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar