திருப்பரங்குன்றம் கோயிலில் உற்சவர்களுக்கு கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2017 04:06
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உற்சவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, ஸ்ரீபலி நாயகர் விக்கரகங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
உற்சவர்கள் ஐம்பொன் விக்ரகங்கள், ஸ்ரீபலி நாயகர் (சத்தியகிரீஷ்வரர், கோவர்த்தனாம்பிகை) வெள்ளி விக்ரகங்களுக்கு ஜடி பந்தன திருப்பணிகள் பழமை மாறாமல் நேற்றுமுன்தினம் நிறைவடைந்தது. சித்திரங்களில் இருந்த சுவாமியின் சக்தி, விக்ரகங்களில் கலை ஏற்றம் செய்யப்பட்டது. விசாக கொறடு மண்படத்தில் நான்கு வெள்ளி குடங்களில் புனிதநீர் நிரப்பி முதல்கால யாகசாலை பூஜைகள் நடந்தது. காலை 2ம் கால யாகசாலை பூஜைகளுக்குப்பின்பு உற்சவர்களுக்கு புனிதர் நீர் அபிஷேகம் முடிந்து மகா அபிஷேகம் நடந்தது.