Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெக்காளியம்மன் கோவில் ... வீரகாளியம்மன் கோவிலில் மழைவேண்டி யாகம் வீரகாளியம்மன் கோவிலில் மழைவேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூங்குடி நாட்டில் 12ம் நுாற்றாண்டு நடுகல்!
எழுத்தின் அளவு:
பூங்குடி நாட்டில் 12ம் நுாற்றாண்டு நடுகல்!

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2017
11:06

வீரர்களின் நினைவாக நடுகல் நடும் பழக்கம் பழங்கால தமிழர்களிடம் இருந்து வந்தது. மூன்று வீரர்களின் புடைச்சிற்பத்துடன் கூடிய வீர நடுகல் சிவகங்கை அருகே மேலப்பூங்குடி கண்மாய் கரை அருகே உள்ளது. மூன்றடி நீளம், இரண்டடி உயரம் கொண்டது. மூன்று வீரர்களும் தலையில் கொண்டையுடன் பத்தரகுண்டலத்தை காதணியாக அணிந்துள்ளனர். உடைகளில் மாறுபாடு இருக்கிறது. நடுவில் உள்ள வீரனின் வலதுகையில் வாள் உள்ளது. மற்ற வீரர்களிடம் இடது கையில் வில், வலது கையில் நீண்ட ஆயுதம் உள்ளன.

கீழக்கரை தொல்லியல் ஆய்வாளர் உ.விஜயராமு கூறியதாவது: முற்காலத்தில் இப்பகுதி பூங்குடி நாடு என அழைக்கப்பட்டது. நடுக்கல்லில் இடதுபுறம் இருப்பவர் அந்த பகுதியின் தலைவனாக இருந்திருக்கலாம். பாண்டிய நாட்டில் இறந்தோரை தாழியில் வைத்து புதைக்கும் பழக்கம் தான் அதிகம். நடுகல் நடுவது அதிகம் இல்லை. இப்பகுதியில் மூன்று வீரர்களை கொண்ட நடுகல் கண்டுபிடித்தது இதுவே முதல்முறை.

சிற்பத்தின் அமைப்பு தன்மையை ஆய்வு செய்ததில் நடுகல் கி.பி. 12 ம் நுாற்றாண்டாக கருதலாம். சோழர்களிடம் இழந்த பாண்டிய நாடு சுந்தரபாண்டியனால் மீட்கப்பட்டது. இதற்காக பல இடங்களில் போர் நடந்துள்ளது. பனிரெண்டாம் நுாற்றாண்டில் சிவகங்கை மாவட்டத்தில் நெட்டூர் (இளையான்குடி அருகே) கீழைமங்கலம், மேலைமங்கலம், மட்டியூர் (எஸ்.வி.மங்கலம்), கழக்கோட்டை, திருவேகம்பத்துார் போன்ற இடங்களில் போர் நடந்துள்ளன. அப்போரில் மடிந்தோரை பெருமை சேர்க்கும் வகையில் வீரக்கல் நடப்பட்டிருக்கலாம். இக்கல்லின் பின்பகுதி ஒரு கல்பதுக்கை உள்ளது. அதற்கு அடியில் அவர்கள் பயன்படுத்திய கருவிகள், அணிகலன்கள், மண்பாண்டங்கள் புதைத்து வைத்திருக்கலாம். அப்பகுதியில் மக்களின் வாழ்விடத்திற்கான எச்சங்களும் உள்ளன. எட்டு அடி நீளம், இரண்டரை அடி அகலம் கொண்ட பாறைக்கல் ஒன்று உள்ளது. இப்பகுதியை தொல்லியல் துறை ஆய்வு செய்தால் மேலும் பல அரிய பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது, என்றார். தொடர்புக்கு 94864 17770.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா இனிதே நடைபெற வேண்டி, நகர காவல் ... மேலும்
 
temple news
சிவாஜிநகர்: கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு, பெங்களூரு சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் காரையூர் சிவன் கோயிலில் சாமி சிலைகளை மர்மநபர்களால் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar