பதிவு செய்த நாள்
19
ஜூன்
2017
01:06
திருப்பூர் : மங்கலம், பூமலூரில் உள்ள புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது. கடந்த, 13ம் தேதி காலை, 7:35 மணிக்கு, திருவிழா கொடியேற்றமும், கூட்டுப்பாடல் திருப்பலி நிகழ்ச்சியும் நடந்தது. கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 17ம் தேதி மாலை, ஆயர் தாமஸ் அக்வினாஸூக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு மின் அலங்காரம் செய்யப்பட்டிருந்த ஆடம்பர தேர்பவனியும், திவ்ய நற்கருணை ஆசீர்வாத நிகழ்ச்சியும் நடந்தது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தேர், வழக்கமான வீதிகள் வழியாக சென்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள், ஆராதனை பாடல்களை பாடியவாறு தேரை இழுத்து சென்றனர். நேற்று காலை, 6:30 மணிக்கு தேர் திருப்பலி நிகழ்ச்சியும், கூட்டுப்பாடல் திருப்பலியும், வட்டார முதன்மை குரு ஜெரோம் தலைமையில் நடந்தது. காலை, 10:30 மணிக்கு, வேண்டுதல் தேர் நிகழ்ச்சியும், காலை, 11:00 மணிக்கு கூட்டுப்பாடல் திருப்பலியும், தஞ்ாவூர் ஜீசஸ் கான்வென்ட் அருள் இருதயத்தின் மறையுரையும் நடந்தது.