தேவகோட்டை: தேவகோட்டை, ராம்நகர் பங்கை சேர்ந்த உலகமீட்பர் ஆலயம் நவநாள் திருவிழா 9 தினங்கள் நடந்தது. விழா ஜூன் 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. எட்டாம் நாள் நற்கருணை விழா நடந்தது. ஒன்பதாம் நாள் திருவிழா நடந்தது. ராம்நகர் பங்கு பாதிரியார் சேசு தலைமை வகித்தார். தேவகோட்டை வட்டார பங்கு பாதிரியார் பாஸ்டின் முன்னிலை வகித்தார். நெல்லை மறைமாவட்ட முதன்மை குரு சேவியர் டெரன்ஸ் மறையுரை நிகழ்த்தினார். சிறப்பு திருவிழா திருப்பலி நடந்தது. தொடர்ந்து உலகமீட்பர் அலங்கார ரதத்தில் ராம்நகர் முக்கிய வீதிகளின் வழியே தேர்பவனி நடந்தது.