கடலுார்: கடலுார், கூத்தப்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரர் கோவில் புதுப்பிக்கப்பட்டதையொட்டி நாளை (21ம் தேதி) மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனையொட்டி கடந்த 16ம் தேதி மாலை கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. மறுநாள் கோ பூஜை, ஆச்சார்ய பூஜை, ரக்ஷபந்தனம், கலச பிரதிஷ்டை, வேதபாராயணம், தீபாராதனை நடந்தது. அன்று இரவு பாலிகா, வாஸ்து பூஜைகளைத் தொடர்ந்து தீபாராதனை நடந்தது. மூன்றாம் நாளான நேற்று காலை கலச தேவதா பூஜை நடந்தது. மாலை பிருந்தாவனத்திற்கு பிம்ப சுத்தியும், இரவு ேஹாமங்களை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இன்று ஏகாதசி மற்றும் வேதபாராயணம் நடக்கிறது. நாளை (21ம் தேதி) காலை 6:30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.